அமெரிக்காவின் 'ஃபார்ச்சூன்' பத்திரிகை 40 வயதிற்குட்பட்ட தொழிலதிபர்கள் பட்டியலை வெளியிட்டது. அமெரிக்காவில் வசிக்கும் முக்கியத் தொழிலதிபர்கள் 40 பேர் அந்த பட்டியலில் இடம்பிடித்தனர்.
அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஜூன் பன்சல், அன்கிதி போஸ் ஆகிய இரண்டு பேரும் அமெரிக்க தொழிலதிபர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அர்ஜூன் பன்சல்(35) 'இன்டெல்' நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு ஆய்வுக் கூட்டத்தின் துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார்.
அதையடுத்து அன்கிதி போஸ்(27) 'ஸ்லிங்கோ' என்ற ஃபேஷன் தளத்தின் தலைமை நிறுவனராக (சிஇஓ) உள்ளார்.
இதையும் படிங்க: 'அமெரிக்கா உள்ளிட்ட எந்த அணியிலும் இந்தியா இல்லை!' - ஓய்வுபெற்ற கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே. சர்மா