ETV Bharat / international

விண்வெளியிலும் கடலிலும் நான் தான் ஃபர்ஸ்ட் - அமெரிக்க பெண்ணின் சாதனை!

author img

By

Published : Jun 17, 2020, 5:02 PM IST

வாஷிங்டன் : கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரெஞ்சில் உள்ள செலஞ்சர் முனைக்கு சென்று திரும்பிய முதல் பெண் எனும் சாதனையை கேத்ரின் சல்லிவன் படைத்துள்ளார்.

America
America

அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் சல்லிவன் (வயது 68), 1984ஆம் ஆண்டில் நாசாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி ஆவார். இவர் நாசாவில் பணியாற்றிய காலத்திலே மூன்று முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ளார். பின்னர், தனது ஓய்வுக்குப் பிறகு கடல் மீதான ஆர்வத்தில் என்ஓஏஏ (National oceanic atmospheric Administration) நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றத் தொடங்கினார்.

அப்போது அவர், பசிஃபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியும், உலகின் ஆழமான பகுதியுமான மரியானா அகழியில் உள்ள செலஞ்சர் முனைக்கு சென்று படம் பிடிக்க முடிவு செய்தார். இதற்காக பூமியின் ஐந்து பெருங்கடல்களில் உள்ள ஆழமான இடங்களைப் பார்வையிட உருவாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப நீர்மூழ்கிக் கப்பலான 'லிமிட்டிங் காரணி' கப்பலில் பயணம் செய்தார்.

வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்து தற்போது திரும்பியுள்ள ஊர் திரும்பியுள்ள கேத்ரின், உலகின் ஆழமான பகுதிக்கு சென்று வந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மரியானா ட்ரெஞ்சில் உள்ள செலஞ்சர் முனைக்கு சென்று திரும்பிய முதல் பெண்

இவர் முதன்முறையாக விண்வெளிக்கு சென்ற போது சேலஞ்சர் விண்கலத்திற்கு வெளியே சுமார் மூன்றரை மணி நேரம், விண்வெளிப் பாதையில் சக நாசா விண்வெளி வீரர் டேவிட் லீட்ஸ்மாவுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அமெரிக்கா பல்கலை.யில் ஆன்லைன் பட்டய படிப்பு முடித்த தமிழ் மாணவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.