ETV Bharat / international

அமெரிக்க தேர்தல்: நெருக்கடியில் பேஸ்புக், ட்விட்டர் - மார்க் சூகர்பெர்க்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதால் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தினர் அதிக நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Facebook, Twitter CEOs to be pressed on election handling

author img

By

Published : Nov 17, 2020, 10:56 AM IST

வாஷிங்டன்: நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து பரப்பப்படும் கருத்துகளையும், தவறான தகவல்களை பரப்புவோரை கட்டுப்படுத்தவும் பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டரின் தலைமை நிர்வாக அலுவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதில் குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் இவை அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல என அந்த ட்வீட்டை நீக்கிவிட்டது.

இழுபறியாக இருந்த தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட பின்னரும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் இந்த அறிவிப்பினை கண்டித்து, தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் என பலமுறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவந்தார்.

இவரது நடவடிக்கைகளை அமெரிக்க செனட் சபையினரும் தடுக்காமல் இருந்தனர். மாறாக செனட் சபையில் உள்ள ட்ரம்ப்பின் ஆதரவாளரான சென் லிண்ட்சே கிராம், தோல்வியை ஏற்றுக்கொள்ளாதே. தொடர்ந்து போராடு எனவும் ட்ரம்பிற்கு தொடர்ந்து ஆதரவளித்தார்.

மேலும், ட்ரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரம்பிற்கு ஆதாரவான கருத்துகளைத் தெரிவித்ததுடன், தேர்தலில் நடந்திருக்கும் திருட்டுத்தனங்களை உடனே நிறுத்த வேண்டும் என தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இதனால், சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்க தேர்தல் தொடர்பான தேவையற்ற பதிவுகளை கண்காணிப்பதும், கையாள்வதும் மிகவும் சிக்கலாக மாறியதையடுத்து, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர்களான மார்க் சூகர்பெர்க், ஜாக் டோர்சே ஆகியோர்களுக்கு தேர்தல் முடிவுகளால் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பலரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "தேர்தலில் நான்தான் வென்றேன்" - தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அடம்பிடிக்கும் ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.