உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில், வைரசில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நோய், சுவாசம் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தும் வைரசான கரோனாவை இதற்கு முன்னர் வந்த வைரஸ் பாதிப்புடன் ஒப்பிட்டு அதன் மூலம் எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கரோனா வைரஸ் என்பது பொதுப்பெயர்தான். ஏற்கனவே உருவனா சார்ஸ், மெர்ஸ் உள்ளிட்ட நோய்களும் கரோனா வகை வைரஸ் மூலம் தான் ஏற்பட்டுள்ளன. தற்போதைய வைரஸ் பாதிப்பானது கரோனா வகையில் கோவிட்-19 என்ற பிரிவைச் சேர்ந்ததாகும்.
இந்நிலையில், ஏற்கனவே பதிவான மெர்ஸ் வைரஸ் தடுப்பூசி மூலம் தற்போதைய கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பூசியை கண்டுபிடிக்க இயலுமா என்ற சோதனையை அமெரிக்க ஆய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
மெர்ஸ் வகையிலான பாதிப்புடன் கரோனா ஒத்துப்போகும் நிலையில் ChAdOx1 SARS2 என்ற குரங்குகளுக்கு பயன்படுத்தும் தடுப்பூசியில் கரோனா பாதிப்பை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதாரக் கழகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின்படி, தடுப்பூசி மாதிரிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆய்வு தொடக்கக்கட்டத்தில் இருந்தாலும் அதன் விவரங்களை மக்கள் தேவைக்காக இணையதளத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்போர்டு ஜென்னர் அமைப்பும் தடுப்பூசி ஆய்வை மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மெர்ஸ் நோய் தடுப்பூசியைக் கொண்டு தயார் செய்யப்படும் கோவிட்-19 தடுப்பூசி மனிதர்களிடம் முதற்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டன், சௌதி அரேபியா ஆகிய நாடுகள் இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாகவும், குரங்குகளின் தடுப்பூசி இதற்கு முன்னர் மலேரியா, எச்.ஐ.வி., ஹெப்படைடிஸ் சி, காசநோய், எபோலா ஆகிய ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'ஜனநாயகத்திற்கு அபாயம்' கொதித்தெழுந்த இஸ்ரேல் மக்கள்