அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து சான் சீட்ரோ நோக்கிச் சென்ற பேருந்து தெற்கு கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. மழையால் பாதிப்படைந்த சாலையில் அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அதனால் அது தடம்புரண்டதாகவும் கூறப்படுகிறது.
சாலையிலிருந்து வெளியேறிய அப்பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். பேருந்துக்குள்ளேயே சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகத் தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணித்த யாரும் சீட் பெல்ட் போடவில்லை எனக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சிறிய காயங்களுடன் பேருந்து ஓட்டுநர் உயிர்தப்பியதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சிவ சேனா துணைத் தலைவர் வண்டி மீது துப்பாக்கிச்சூடு