அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், நாட்டு மக்களுக்கு கரோனா பாதிப்பு குறித்த முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அந்நாட்டில் நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் பேர் கோவிட்-19 பாதிப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.
உலக வல்லரசான அமெரிக்காவில்தான் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. அங்கு தற்போது தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதிபராக பொறுபேற்றுள்ள ஜோ பைடன் பிபைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
அதன் பின்னர் மக்களிடம் பேசிய அவர், மருத்துவ நிபுணர்களின் வார்த்தைகளை மக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பு ஏற்படுகிறது. தடுப்பூசி தற்போது வந்துவிட்டாலும், உயிரிழப்பை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். எனவே சமூக இடைவேளி, முகக்கவசம் போன்ற விதிகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 628 பேர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் கவிழ்ந்த இஸ்ரேல் அரசு : 2 ஆண்டுகளில் நான்கு தேர்தல்