உக்ரைன் நாட்டு எல்லையில் ஒரு மாதத்திற்கும் மேலாக மிகவும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அண்டை நாடான ரஷ்யா, உக்ரைன் நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்திருவருகிறது.
உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒரு லட்சம் படையினரை ரஷ்யா தற்போது குவித்துவைத்து போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டுப்படைகளான நாட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உக்ரைனுக்கு ஆதரவாக நாட்டோ நாடுகளின் படைகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்படுகின்றன. ஏற்கனவே ஆயிரக்கணக்கான நாட்டோ படை வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ள நிலையில், மேலும் மூவாயிரம் படை வீரர்களை போலாந்து நாட்டிற்கு அமெரிக்கா அனுப்புகிறது. இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் எந்த நேரத்திலும் போர் நிகழும் என்ற காரணத்தால் உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றும் வேலையில் அந்நாடு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: முதலில் சீனா, அடுத்து ரஷ்யா; இம்ரான் கானின் அதிரடி பயணங்கள்