நைஜீரியாவின் லாகோஸ் நகரில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் முதற்கட்டத்தேடலின்போது 22 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இச்சமயத்தில் செய்தி வெளியிட்டிருக்கும் நைஜீரிய அரசு, மொத்தம் 36 பேரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளது.
கட்டடத்தில் மொத்தம் 50 பேர் வரை இருந்ததாகவும், அதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ள அரசு உயர் அலுவலர்கள், மீட்புப் பணிகளைத் துரிதபடுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உணவுப் பஞ்சம்: ஆப்கனில் மகள்களை விற்கும் பெற்றோர்!