2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் எபோலா வைரஸால் 1,510 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 400 பேர் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்நிலையில், இந்தாண்டு எபோலாவின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால், கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன.
இது தொடர்பாக உலக சுகாதார மையம் தெரிவிக்கையில், "கடந்த ஜனவரி மாதம் முதல் 119 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும், 42 சம்பவங்கள் மருத்துவ மையங்கள் மீது நிகழ்த்தப்பட்டன. இதில், 85 பேர் பலத்த காயமடைந்ததோடு பலர் கொல்லப்பட்டனர். இது மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான லிபிரியா, கினியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸால் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு, 11 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.