ETV Bharat / entertainment

Rajinikanth: புதிய கெட்டப்பில் கலக்கும் ரஜினி.. படப்பிடிப்பு தளத்தில் வெளியான வீடியோ வைரல்! - ரஜினிகாந்த் வீடியோ

Thalaivar 170 shooting: ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி
தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 11:04 PM IST

தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி

சென்னை: சூப்பர் ஸ்டார் என்று உலகெங்கும் உள்ள தனது ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் பல இளம் இயக்குநர்கள் கோடம்பாக்கத்திற்குள்‌ நுழைகிறார்கள். சிலருக்கு இவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பும் அமைந்து விடுகிறது. சிலருக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் இவரது படம்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இவரது படங்களின் சாதனைகளை, இவரது படங்களே தான் முறியடித்து வருகின்றன. இவ்வாறு இருக்க சமீபத்தில் சில ரஜினியின் படங்கள், கேலியான விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் "ஜெயிலர்" படத்தில் நடித்தார்.‌ படம் தொடக்கத்தில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பல இடங்களில் ஜெயிலர் படம் நல்ல வசூலை ஈட்டியது.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் மோகன் லால் மற்றும் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரம் சிவராஜ் குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில், குறிப்பாக இருவரும் ரஜினிகாந்தின் நண்பர்களாக நடித்திருந்தது படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

அனிருத் அமைத்த பன்னணி இசை, மற்றும் பாடல்கள் படத்தை மேலும் கொண்டாட வைத்தது. குறிப்பாக படத்தின் முக்கியமான இடங்களில் வரும் இசை திரையரங்கில் ரசிகர்களின் விசில்களும், கைத்தட்டல்களுமாக இருந்தன. ஜெயிலர் படம் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்" என்ற படத்தில் மெய்தீன் பாய் என்கிற கதாப்பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும் "ஜெய் பீம்" படத்தை இயக்கிய TJ ஞானவேல் படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர். ஜெய்பீம் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படமும் சமுகம் சார்ந்த கதையாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு, திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினிகாந்த் படப்பிடிப்பு சமயத்தில் ரசிகர்களை சந்தித்துள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இளமையான தோற்றத்தில் உள்ள ரஜினியின் லுக் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இதையும் படிங்க: உலக அளவில் ரூ.1100 கோடி வசூல் செய்த ஜவான்! பாலிவுட்ல இதான் ஃபர்ஸ்டாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.