நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் தற்போது ஸ்பாட்டிஃபை ஒலித் தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப்பாடலை கமலே எழுதி, பாடியுமுள்ளார். இதன்மூலம் தனது திரைப்படப் பாடலில் அரசியல் பேசியுள்ளார், கமல். ”ஒன்றியத்தின் தப்பால்லே..., ஒன்னுமில்லே இப்பால்லே..!,”, “கஜானாலே காசில்லே..!", “ “சாவி இப்போ திருடன் கையிலே..!”, போன்ற வரிகள் மூலம் நேரடியாக அரசியல் விமர்சனக் கணைகளை தொடுத்துள்ளார், கமல்ஹாசன்.
ஜூன் 3 அன்று வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகிற மே 15 அன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இதுவரை அரசியல் சார்ந்த படங்கள் எடுத்திருந்தாலும், தன் படங்களில் அரசியல் விமர்சனங்கள் எதுவும் பெரிதாக செய்யாத நடிகர் கமல்ஹாசன் தற்போது நடிகர் ரஜினிகாந்த், விஜய், ஸ்டைலில் ஒப்பனிங் சாங்கில் அரசியல் பேசியுள்ளார்.
இனி நடக்கவிருக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆண்டவரும் நம்ம தளபதியைப் போல ‘ஆடியோ லாஞ்ச் அரசியல் ஸ்பீச்’ தருவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: 'நான் இந்தியில் நடிக்க மாட்டேன்' - நடிகர் மகேஷ் பாபு அதிரடி கருத்து!