ETV Bharat / entertainment

மலேசியாவில் விடுமுறையை கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி! - ப்ரதீப்

Vignesh Shivan Nayanthara: விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் மலேசியாவில் விடுமுறையை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 1:39 PM IST

சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி தனது இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலகு ஆகியோரின் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடினர். விக்னேஷ் சிவன் மலேசியாவில் தனது மனைவி நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், “அவளோடு இருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நான் பிழை பாடலில் இடம் பெற்றதாகும். மேலும், விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கேஷ்வல் உடைகளில் மலேசிய தெருக்களில் நின்றவாறு போஸ் கொடுத்துள்ளனர்.

நயன்தாரா பச்சை நிற ஷர்ட்டும், வெள்ளை நிற ஷூவும் அணிந்துள்ளார். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் வெள்ளை டி-ஷர்ட்டும், கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியை கொண்டாடி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் பதிவில் ரசிகர்கள் “nice photo”, “nayan wiki.. my fav celebrity couple.”, “aww king and queen” என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது நயன்தாரா தனது 75வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மேலும் ‘மன்னாங்கட்டி since 1960’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1,100 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விக்னேஷ் சிவன், நடிகரும் இயக்குநருமான ப்ரதீப் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க: Jigarthanda DoubleX: ‘இறைவி’ படத்தின் சுவாரஸ்யம் குறித்து பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.