ETV Bharat / entertainment

மாலத்தீவில் நீச்சல் உடையில் இளைப்பாறும் தமன்னா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!! - ரஜினிகாந்த்

Tamannaah photos: மாலத்தீவு சென்றுள்ள நடிகை தமன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 6:43 PM IST

ஹைதராபாத்: சமீபத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஜெயிலர் படம் தமன்னாவிற்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தந்த நிலையில், நடிகை தமன்னா மாலத்தீவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் இருப்பது போன்ற புகைப்படத்தைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா, வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. அனிருத் இசையில் இந்த படத்தில் காவாலா என்ற பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார்.

இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாத இளசுகளே இல்லை என கூறலாம், அந்த அளவிற்கு காவாலா பாடல் பிரபலமடைந்தது. காவாலா பாடல் யூடியூபில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமன்னா இந்திய சினிமாவில் பல்வேறு படங்கள் நடித்து வரும் நிலையில் மாலத்தீவிற்கு தற்போது சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு கடற்கரையில் நீச்சல் உடையில் உணவு உண்டு இளைப்பாறுவது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தமன்னா ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது. தமன்னா புகைப்படங்களுக்கு லவ் எமோஜிக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ‘விடுமுறையில் சந்தோஷமாக இருங்கள்’, அந்த வானத்தை காட்டிலும் பொலிவுடன் இருப்பதாகவும், கடற்கரை அழகி என ரசிகர்கள் தமன்னாவின் போஸ்டில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை தமன்னா ஜெயிலர் படத்திற்குப் பிறகு நடிகர் ஜான் ஆபிரகாமுடன் வேதா என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்த வருடம் வெளியாகும் இந்த படத்தை நிகில் அத்வானி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அபிஷேக் பானர்ஜி மற்றும் ஷர்வாரி சிங் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் தமன்னா ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ஆக்ரி என்ற வெப் சீரியசில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: Jawan trailer: நா வில்லனா முன்னாடி வந்து நின்னா?.. மெர்சலுடன் வெளியான ஜவான் டிரைலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.