ETV Bharat / entertainment

பிரபல நடிகருடன் காதலா? மனம் திறந்த நடிகை தமன்னா! - நடிகை தமன்னா புகைப்படங்கள்

நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், இதுபோன்ற வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்றும் நடிகை தமன்னா கூறியுள்ளார்.

Tamannaah
Tamannaah
author img

By

Published : Mar 12, 2023, 8:42 PM IST

ஹைதராபாத்: மும்பையைச் சேர்ந்த நடிகை தமன்னா கடந்த 2005ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

தனுஷ் உடன் நடித்த படிக்காதவன், சூர்யாவுடன் நடித்த அயன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன. நடிகர் கார்த்தியுடன் பையா, சிறுத்தை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், பவன்கல்யாண் உள்ளிட்டோருடன் சில வெற்றிப் படங்களில் நடித்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் இவருக்கு பின்னடைவாக இருந்தது.

பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு பாகுபலி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ராஜமெளளி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

நடிகை தமன்னா திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது வழக்கம். தனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கெனவே அவர் தெரிவித்திருந்தார். அதனால், தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வதந்திகள் பரவின. இதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதற்கு ஏற்றாற்போல், விஜய் வர்மாவும், தமன்னாவும் சேர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருவரும் முத்தமிடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது. அதேபோல், காதலர் தினத்தன்று இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. இதனால் இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டதென்று பேசப்பட்டது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னா தனது காதல் வாழ்க்கை குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், "நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளோம், அதனால் இதுபோன்ற வதந்திகள் பரவியுள்ளன. இந்த வதந்திகள் குறித்து விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மேல் அதுபற்றி பேச ஒன்றும் இல்லை" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: SK-வின் 'மாவீரன்' உரிமையை கைப்பற்றிய பிரபல தனியார் தொலைக்காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.