வாஷிங்டன்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்றிருந்த "நாட்டு நாட்டு" பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. சிறந்த பாடல் பிரிவில், 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. கடந்த 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில், நாட்டு நாட்டு பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை அதன் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் இயக்குநர் ராஜமெளலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்த நிலையில், இயக்குநர் ராஜமெளலி தனது கடவுளைப் பார்த்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "நான் எனது கடவுளை பார்த்துவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ராஜமெளலி மிகவும் எக்சைட்டிங்காக கைகளை கன்னத்தில் வைத்தபடி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை பார்க்கிறார்.
இரண்டாவதாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ராஜமெளலி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி மூவரும் உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்களுடன் 'துணிவு' படத்தை பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!