ETV Bharat / entertainment

நம்பி நாராயணனை பார்த்தபிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது - நடிகர் மாதவன்! - மாதவன்

நடிகர் மாதவன் நடித்து இயக்கி வெளியாகவுள்ள ‘ராக்கெட்ரி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நம்பி நாராயணனை பார்த்தபிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது - நடிகர் மாதவன்!

author img

By

Published : Jun 22, 2022, 4:23 PM IST

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன் எடுத்திருக்கும் படம் 'ராக்கெட்ரி'. இதில் மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று(ஜூன் 22) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய நடிகர் மாதவன், ''நம்பி நாராயணனை சந்திக்கும் முன் இருந்த மாதவனும் அவரை சந்தித்த பின்னர் இருக்கும் மாதவனும் வேறு. நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த ஸ்கிரிப்ட் செய்ய 7 மாதம் ஆனது. நம் நாட்டில் தேச பக்தர்கள் இரண்டு விதமாக உள்ளனர். தினமும் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து, அவர் செய்த சாதனைகளை வெளியில் தெரியாமல் இருப்பவர்கள் ஒரு ரகம்.

நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை. அதன் காரணமாக தான் இந்தப் படம் எடுக்க நினைத்தேன். விகாஸ் இன்ஜினை கண்டுபிடித்ததால் தான், இவருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்தது. இந்த விகாஸ் இன்ஜின் இதுவரை ஃபெயில் ஆனது இல்லை. ராக்கெட் விஞ்ஞானி பற்றி ஒரு படத்தை விஷுவலாக காட்டுவது கடினம்.

என் வாழ்க்கையில் எந்தப் படத்தையும் நான் இயக்கியது இல்லை. படப்பிடிப்பு தொடங்க இருந்த 25 நாட்களுக்கு முன்பு இயக்குநர் இந்தப் படத்தை இயக்கமுடியாது என்று சென்றுவிட்டார். மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும். இந்தப் படத்தை இயக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்ததால் நானே இயக்கினேன்.

3 மொழிகளில் 8 நாடுகளில் எடுக்கப்பட்ட படம் இது. கிட்டத்தட்ட 6 மாதம் ரிகர்சல் செய்து தான் இந்தப் படத்தை எடுத்தோம். என்னுடைய சொந்தப் பல்லை நான் இந்தப் படத்திற்காக மாற்றியுள்ளேன். உடல் எடையை கூட்டி மீண்டும் 14 நாட்களில் உடல் எடையைக் குறைத்து நம்பி நாராயணன் போலவே இருக்க வேண்டும் என அனைத்தையும் உண்மையாகவே உருவாக்கியுள்ளேன்” எனப் பேசினார்.

நம்பி நாராயணனை பார்த்தபிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது - நடிகர் மாதவன்!

மேலும், இந்த வாரத்திற்குள் பிரதமர், குடியரசுத் தலைவர், விஞ்ஞானிகள் போன்றவர்களைப் படம் பார்க்க வைக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார். இப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: வெளியானது 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக்; விஜய் பிறந்தநாளுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.