ETV Bharat / entertainment

கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபு தேவாவின் 'முசாசி' - சினிமா செய்திகள்

டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான பிரபு தேவாவின் முசாசி திரைப்படம் கோடை விடுமுறைக்காக தயாராகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 15, 2023, 6:56 AM IST

டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா தமிழ், இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழி படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இவரது நடனத்தை பார்த்து இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று பாராட்டப்படுபவர். நடிப்பை தாண்டி இயக்குநராக தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெற்றி பெற்றவர். விஜய் நடித்த போக்கிரி, ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பிய பிரபுதேவா தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் பொய்க்கால் குதிரை, பஹீரா உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகின.

தற்போது பிரபுதேவா முசாசி என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'முசாசி' ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

'முசாசி' என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது. இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையமைப்பில், பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு, நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார்.

இதனிடையே பிரபுதேவாவிற்கு முதன்முறையாக ஃபோக் மார்லி பாடகர் அந்தோணி தாசன் பின்னணி குரல் கொடுத்திருப்பதால் இந்த பாடலுக்கும், பாடலுக்கான காணொளிக்கும் பெரும் எதிர்பார்ப்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் கூட்டணி - பிரமாண்டமாக நடைபெற்ற பூஜை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.