ஹைதராபாத்: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான படம் பதான். தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆப்ரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடக்கம் முதலே வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் திரைக்கு வந்த 25 நாட்கள் முடிவில், உலகம் முழுவதும் ரூ.988 கோடியை வசூலித்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்தி திரையுலகிலும் புதிய சாதனை படைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி 2 (Baahubali: The Conclusion) படம் ரூ.510.99 கோடி வசூலித்திருந்த நிலையில், அதை பதான் படம் முறியடித்துள்ளது. தற்போது வரை இந்த படம் ரூ.511.22 கோடியை வசூலித்திருக்கிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.200-ஆக குறைந்துள்ளதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் தவான் இயக்கத்தில் ஷெசாடா, பாலிவுட்டில் Ant-Man and the Wasp: Quantumania ஆகிய திரைப்படங்கள் வெளியாகியும், பதான் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் செல்வதாக கூறப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளதே இதற்கு காரணம் என தெரிகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியாகி உள்ளதால் பாலிவுட் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹன்சிகாவின் "லவ் ஷாதி ட்ராமா" - மக்களிடையே பெரும் வரவேற்பு!