சென்னை: 'உண்மையில் நமது பெரும் பிரச்னை, பிரச்னை குறித்த நம் எதிர்வினை தான்' என பாலிவுட் நடிகையும் யோகா வல்லுநருருமான ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். இவர் நடித்து வந்த இயக்குநர் ரோகித் ஷெட்டியின் ‘இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்’ எனும் வெப் சிரீஸின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் இவரின் கால் முறிந்தது.
தற்போது அதிலிருந்து சற்று குணமாகி வருகிறார். இந்நிலையில், இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஓர் காணொலி ஒன்றில் தனது சக்கர நாற்காலியில் இருந்த படியே யோகாசனங்கள் செய்யும் காணொலியை வெளியிட்டார். மேலும், அந்தக் காணொலியின் கீழ், “நமது பிரச்னை தான் பிரச்னையா அல்லது நம் பிரச்னை குறித்த நம் எதிர்வினை பிரச்னையா...? இந்த சிந்தனை இன்று காலை எனக்குள் வந்தது. ஏன் ஒரு காயம் என் தினசரி காலை வேளைகளை பாதிக்க வேண்டும்..? அதனால் நான் அதை அப்படி செய்யவிடக் கூடாதென நினைத்தேன்.
அதன் படி, இன்றைக்கு மிக எளிய யோகாசனங்களை செய்தேன். ’முதலில் திர்யக தடசனா’, இது முதுகுத் தண்டுகளை பலப்படுத்தும். அதைத் தொடர்ந்து ’கோமுகாசனா’ இது தோள்பட்டையை விரியச் செய்யும். மேலும், இது நெஞ்சு மற்றும் நுரையீரலையும் விரியச் செய்யும். இந்த எளிய யோகாசனங்களை தினமும் பின்பற்றுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புஷ்பாவாக மாறிய ரன்வீர் - அல்லு அர்ஜூனின் மாஸ் ரியாக்ஷன்