ETV Bharat / entertainment

ஓடிடியில் வெளியானது பா.ரஞ்சித்தின் ’நட்சத்திரம் நகர்கிறது’ - ranjith

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் வெளியானது பா.ரஞ்சித்தின் ’நட்சத்திரம் நகர்கிறது’

author img

By

Published : Sep 29, 2022, 9:23 AM IST

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் , நடிகர்கள் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் மற்றும் பலர் நடித்து திரையரங்குகளில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ளது.

ஆணவக்கொலை, தன்பாலின ஈர்ப்பாளர்கள், சமீப கால காதல், சாதியம் என பல கருத்துகளை ஒரு பின்நவீனத்துவ அணுகுமுறையோடு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

பா.ரஞ்சித்தின் வழக்கமான படங்களில் இருந்து சற்று மாறுபட்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் ஒரு சில கலவையான விமர்சங்களுக்கும் ஆளானது.

இந்த திரைப்படம் ஓடிடி யில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ’'Game of thrones'-ஐ விட நம் பொன்னியின் செல்வன் மேல்..!’ - நடிகர் கார்த்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.