ETV Bharat / entertainment

இமானுக்கு அவரது முன்னாள் மனைவி வாழ்த்து தொனியில் மிரட்டல்!

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இசை அமைப்பாளர் இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவிக்கும் தொனியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இமானுக்கு அவரது முன்னாள் மனைவி வாழ்த்து தொனியில் மிரட்டல்..!

author img

By

Published : May 18, 2022, 6:54 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர், இமான். இவருக்கும் மோனிகா ரிச்சர்ட் என்பவருக்கும் கடந்த 2008-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தனது மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

இமானுக்கு அவரது முன்னாள் மனைவி வாழ்த்து தொனியில் மிரட்டல்..!
இமானுக்கு அவரது முன்னாள் மனைவி வாழ்த்து தொனியில் மிரட்டல்..!

இந்நிலையில் இமான் கடந்த ஞாயிரன்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தமிழ்த்திரையுலகில் கலை இயக்குநராகப் பணியாற்றி மறைந்த உபால்டுவின் மகள் அமலியை அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இசை அமைப்பாளர் இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவிக்கும் தொனியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துகள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால், உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை. கவனிக்கவும் இல்லை. ஆனால், அவர்களுக்குப் பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ”ஜெய் பீம்” பட விவகாரம்- நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.