ஹைதராபாத்: 2023ஆம் ஆண்டிற்கான 51வது சர்வதேச 'எம்மி விருதுகள்' அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இன்று (நவ.21) நடைபெற்று வரும் நிலையில், தனித்துவ நகைச்சுவை தொடருக்கான விருதை இந்தியாவின் நடிகரும், இயக்குநருமான வீர் தாஸ் பெற்றுள்ளார்.
திரைப்படங்களுக்கு வழங்கக் கூடிய உயரிய விருதான ஆஸ்கர் விருதைப் போல ஓடிடி தளத்தில் வெளியாகும் சிறந்த படங்கள் மற்றும் தொடர்களுக்கு வழங்கக்கூடிய உயரிய விருது எம்மி விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு விருதிற்காக மொத்தம் 56 நபர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதில் மூன்று இந்திய படைப்பாளிகள் பரிந்துரைக்கப்பட்டனர்.
-
We have a Tie! The International Emmy for Comedy goes to "Vir Das: Landing” produced by Weirdass Comedy / Rotten Science / Netflix#iemmyWIN pic.twitter.com/XxJnWObM1y
— International Emmy Awards (@iemmys) November 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We have a Tie! The International Emmy for Comedy goes to "Vir Das: Landing” produced by Weirdass Comedy / Rotten Science / Netflix#iemmyWIN pic.twitter.com/XxJnWObM1y
— International Emmy Awards (@iemmys) November 21, 2023We have a Tie! The International Emmy for Comedy goes to "Vir Das: Landing” produced by Weirdass Comedy / Rotten Science / Netflix#iemmyWIN pic.twitter.com/XxJnWObM1y
— International Emmy Awards (@iemmys) November 21, 2023
அதில், நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் 'Vir Das: Landing', சிறந்த தனித்துவமான நகைச்சுவை தொடருக்கான பிரிவில் விருதை வென்றது. இதற்கான விருதை அப்படத்தின் நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான வீர் தாஸ் பெற்றுக் கொண்டார். மேலும், இந்த விழாவில் இந்திய திரைப்பட இயக்குநர் ஏக்தா கபூர் சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிச் சென்றார்.
விருதுகளை தட்டிச்சென்ற பிரபலங்களின் பட்டியல்:
பிரிவு | விருது பெறுபவர் | படம் | நாடு |
சிறந்த நடிகர் | மார்ட்டின் ஃப்ரீமேன் | தீ ரெஸ்பாண்டர் | லண்டன் |
சிறந்த நடிகை | கார்லா சூசா | லா கைடா [டைவ்] | மெக்சிகோ |
விருதுகளை பெற்ற நிகழ்ச்சிகள்:
பிரிவு | விருது பெறும் படங்கள் | நாடு |
சிறந்த நகைச்சுவை | வீர் தாஸ்:லேண்டிங் | இந்தியா |
சிறந்த நகைச்சுவை | டெர்ரி கேர்ள்ஸ் - சீசன் 3 | லண்டன் |
சிறந்த ஆவணப்படம் | மரியுபோல்: தி பீப்பிள் ஸ்டோரி | லண்டன் |
சிறந்த நாடக தொடர் | தி எம்ப்ரஸ் | ஜெர்மனி |
சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சி | A Ponte - தி பிரிட்ஜ் பிராஸில் | பிரேசில் |
சிறந்த சிறு தொடர் | Des Gens Bien Ordinaires [ வெரி ஆர்டினரி வோர்ல்டு] | பிரான்ஸ் |
சிறந்த விளையாட்டு ஆவணப்படம் | ஹார்லி & கத்யா | ஆஸ்திரேலியா |
சிறந்த டெலினோவெலா | யார் கி (ஃபேமிலி சீக்ரெட்ஸ்) | டர்க்கி |
சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி | லா கைடா [டைவ்] | மெக்சிகோ |
சிறந்த குழந்தைகள் அனிமேஷன் | தி ஸ்மெட்ஸ் அண்ட் தி ஸ்மூஸ் | லண்டன் |
சிறந்த குழந்தைகளுக்கான ரியாலிட்டி | பில்டு டூ சர்வே | ஆஸ்திரேலியா |
சிறந்த குழந்தைகளுக்கான லைவ்-ஆக்ஷன் | ஹார்ட் பிரேக்கிங் ஹை | ஆஸ்திரேலியா |
சிறந்த கலை நிகழ்ச்சி | பஃபி செயின்ட்-மேரி, ஈகிள் விஷன் / ஒயிட் பைன் பிக்சர்ஸ் | கனடா |
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 'டெல்லி கிரைம் 2'-க்காக நடிகை ஷெஃபாலி ஷா மற்றும் 'ராக்கெட் பாய்ஸ் 2' நடிகர் ஜிம் சரப் ஆகியோரும் சர்வதேச எம்மி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நடிகை ஷெஃபாலி ஷா, லா கைடா படத்தில் நடித்த கர்லா சூசாவிடம் விருதை இழந்தார்.
இதையும் படிங்க: சிவப்பு நிற சேலையில் த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!