ETV Bharat / entertainment

நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன்- கருணாஸ் - actress iniya

இனிமேல் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன்- கருணாஸ்

author img

By

Published : Sep 29, 2022, 9:22 AM IST

ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ், இனியா உள்ளிட்டோர் நடித்து வெளியான 'ஆதார்' படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், கருணாஸ், இனியா, இசை அமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா, திலீபன் , தயாரிப்பாளர் சக்தி பிலிம்ஸ் சக்தி வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய கருணாஸ், “நான் இதுவரை 130படக்களுக்கு மேல் நடித்துள்ளேன். ஆனால் இப்படத்தில் எனது நடிப்புக்கு எல்லா தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். எனக்கே புதிதாக உள்ளது. இனிமேல் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இப்படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி”

பின்னர் பேசிய தயாரிப்பளர் சக்தி வேலன்,“இப்போது உள்ள காலத்தில் திரைப்படம் எடுப்பது மிகப் பெரிய கடினம் . ரசிகர்களை திரையரங்கு நோக்கி அழைத்து வருவது மிகவும் சிரமம். நல்ல படங்களை மட்டுமே ரசிகர்கள் விரும்புகின்றனர்”

பின்னர் பேசிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில்,”இப்படம் வெற்றிபெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. எனது பாடல்களையும் பின்னணி இசையையும் வாழ்த்தியவர்களுக்கு நன்றி. இப்படத்தை பார்த்து அப்பா இதுபோன்ற படங்களை பண்ணு” என்று வாழ்த்தியதாக கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு தற்போது பிடித்த பாடல் ’பொன்னி நதி’ தான்...! - நடிகர் சரத்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.