தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காமெடி நடிகர்களான யோகி பாபு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட 4 காமெடி நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த யோகிபாபு, 'வடிவேலு நல்ல நடிகர். நான் அவருடைய தீவிர ரசிகன். அவருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன். கட்டாயமாக, அவருடன் சேர்ந்து நடிப்பேன்.
நடிகர் ஷாருக்கானுடன் நான் இரண்டாவது படம் நடிக்கிறேன். அவர் நல்ல நடிகர். அதற்கு இயக்குநர் அட்லிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கதை, வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் கிடைத்ததும் இயக்குவேன். நடிகர் விவேக் விஞ்ஞானி அப்துல்கலாம் உட்பட பலரிடம் பயணம் செய்துள்ளார்.
நடிகர் விவேக் நல்ல கருத்துள்ள மனிதர், அவர் அப்துல்கலாம் போன்றவருடன் பயணம் செய்தவர். நான் இயக்குநர் சொல்வதைத் தான் நடித்து வருகிறேன். நான் ஒத்துக்கொள்கிறேன். கதாநாயகனைப்போல் முகபாவனை இல்லாதவன் நான். ஆனால், மண்டேலா போல படங்கள் கதாநாயகன்களை வைத்து இயக்கக்கூடிய படம் அல்ல. அதனால், நான் இது மாதிரியான படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறேன். காமெடியனாகவும் கதாநாயகனாகவும் பார்ப்பது ஒரே முகம் தான். அது மக்களுக்கு நன்றாகத்தெரியும்' எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருநெல்வேலியில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு அமோக வரவேற்பு