ETV Bharat / entertainment

Vani Jairam: 'காற்றில் கலந்த கான சரஸ்வதி' வாணி ஜெயராம் குறித்த முழு விபரம்!

மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

'காற்றில் கலந்த கான சரஸ்வதி' வாணி ஜெயராம் குறித்த முழு விபரம்!

author img

By

Published : Feb 4, 2023, 7:38 PM IST

Updated : Feb 4, 2023, 8:32 PM IST

சென்னை: இந்திய திரைத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேல் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 78. 1945ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராமனின் இயற்பெயர் கலைவாணி. இவர் சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தனது இனிமையான குரலால் திரையுலகில் வானுயர வளர்ந்து நிற்பவர். இவர், டி.ஆர்.பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடகாவில் இசையைப் பயின்றவர் ஆவார். வானொலியில், போடப்படும் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வைத்து அதன்படி சாதித்தும் காட்டியவர்.

இசை மீது வாணி ஜெயராமுக்கு இருந்த தீரா காதல் இவரை இந்திய அளவில் புகழ்மிக்க பாடகியாக மாற்றியது. ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னர், ஒரு ஆண் இருப்பர் என்பது வாணி ஜெயராம் (Vani Jayaram) விஷயத்தில் 100 சதவீதம் உண்மை. மனைவியின் பாடகி ஆசையை நிறைவேற்றப் பக்க பலமாய் நின்றார் அவரின் கணவர் ஜெயராம்.

1971-ம் வருடம் வெளிவந்த ‘குட்டி’ என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். இவரது முதல் பாடலே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார்.

இந்தியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஒடியா, செங்காலி என 10க்கும் மேற்பட்ட மொழிப் பாடங்களைப் பாடி பிரபலமானார். 1974-ல் முதல் முறையாகத் தீர்க்கசுமங்கலி என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர்,

  • நித்தம் நித்தம் நெல்லு சோறு
  • மல்லிகை என் மன்னன் மயங்கும்
  • என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்
  • ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
  • என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
  • வேறு இடம் தேடிப் போவாளே

உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.

தமிழில் திரைத்துறையில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர்.

தேசிய விருதுகள்

1975- தேசிய விருது - சில பாடல்கள் - (ஆபூர்வ ராகங்கள்)

1980-சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது-(சங்கராபரணம்)

1991-சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது-(அனத்திநீயர ஹர, சுவாதி கிரணம்)

2023-பத்ம பூஷன் விருது

மாநில விருதுகள்

1972- சிறந்த பின்னணிப் பாடகி குஜராத் மாநில விருது-(கூங்காட்)

1980-சிறந்த பின்னணி பாடகி தமிழ்நாடு மாநில விருது-(அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

1979-சிறந்த பின்னணி பாடகி நந்தி விருது-(சங்கராபரணம்)

1982-சிறந்த பின்னணி பாடகி ஒடிசா விருது-(தேப்ஜானி)

இவரின் கலை சேவையைப் பாராட்டி 2023 ஆம் ஆண்டுக்கான 'பத்ம பூஷன்' விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று(பிப்.04) தனது வீட்டில் கட்டிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வாணி ஜெயராமின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Vani Jayaram: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

Last Updated : Feb 4, 2023, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.