கடந்த பொங்கல் பண்டிகைக்கு (ஜன.11) நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அஜித் குமார் நடிக்க இருக்கும் 62-வது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த படத்திற்கு ‘AK 62' என தற்காலிக தலைப்பிடப்பட்டது. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடிரென இந்த படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து ‘AK 62' என்ற பெயரை நீக்கியுள்ளார். ’AK 63’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும், நடிகர் அஜித்திற்கு இந்த கதையில் உடன்பாடு இல்லை என்றும் கோலிவுட் வட்டாரங்களால் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
![‘AK 62' படத்திலிருந்து விலகினாரா விக்னேஷ் சிவன்?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17665705_ak.png)
இந்நிலையில் நடிகர் அஜித்தின் 62வது படத்தை கலகத் தலைவன், தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் 67-வது படம் 'லியோ': 'ப்ளடி ஸ்வீட்' - முதல் புரொமோ வெளியீடு