சென்னை: 18 ரீல்ஸ் SP சௌத்ரி தயாரிப்பில் இயக்குநர் P கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஒரு பெண் டாக்ஸி ஓட்டுநர் தனது பயணத்தின்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், வியத்தகு நிகழ்வுகள் குறித்தும், உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'நவம்பர் 11ஆம் தேதியன்று வெளியாவதாக இருந்த எங்கள் "டிரைவர் ஜமுனா" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது.
தாமதத்திற்கு வருந்துகிறோம். அத்துடன் மிக விரைவில் திரைப்படத்தை உங்களின் பார்வைக்கு
இதையும் படிங்க: ’நாளை நம் கையில் இல்லை’- இரண்டு கால்களையே, கைகளாக மாற்றி வாழும் சாதனைப் பெண்மணி