ETV Bharat / entertainment

Actor Dhanush : மீண்டும் பாலிவுட் என்ட்ரி கொடுக்கும் தனுஷ்! யார் கூட தெரியுமா? - Aanand L Rai

பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் - நடிகர் தனுஷ் கூட்டணியில் தயாரக உள்ள தேரே இஸ்க் மெய்ன் படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகி உள்ளது.

Dhanush
Dhanush
author img

By

Published : Jun 21, 2023, 6:38 PM IST

மும்பை : நடிகர் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாக உள்ள தேரே இஸ்க் மெய்ன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிப் படங்களில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையி, தனுஷ் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே ராஞ்சனா, அந்தராங்கி ரே ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகர் தனுஷ் அறிமுகமான நிலையில், பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் அதே கூட்டணி ஒன்றிணைவது குறிப்பிடத்தக்கது. ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. புதிய படத்திற்கு தேரே இஸ்க் மெய்ன் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த படத்தின் முன்னோட்டத்தை படக் குழு வெளியிட்டு உள்ளது.

ராஜன்னா படத்தில் நடித்த சோனம் கபூர், அபே தியோல் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும், பாடல் ஆசிரியர் இர்ஷாத் காமில் மற்றும் இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைக்க உள்ளதாகவும் படக் குழு தெரிவித்து உள்ளது. ராஞ்சனா படத்தின் பிற்பகுதியாக இந்த படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படத்தில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ராஞ்சனா படத்தின்இறுதியில் கோமா நிலைக்கு தனுஷ் சென்றது போல் முடிக்கப்பட்ட நிலையில், அதன் அடுத்த பாகமாக தேரே இஸ்க் மெய்ன் படம் உருவாவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட முன்னோட்ட வீடியோவில், வாயில் சிகரெட் பிடித்தபடி ஆக்ரோஷமாக ஓடி வரும் தனுஷ் கையில் வைத்துள்ள பெட்ரோல் குண்டை சுவற்றில் எழுதப்பட்டுள்ள ராஞ்சனா என்ற பெயரில் தூக்கி எரிகிறார். அதன்பின் பற்றி எரியும் அந்த நெருப்பில் இருந்து தேரே இஸ்க் மெய்ன் என்ற பட பெயர் அறிவிப்பு வருகிறது.

இந்த படம் குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், "ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சில படங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றியதை மறக்க முடியாது. அப்படி ஒரு படம் தான் இது. இந்த படம் எங்கள் எல்லோரின் வாழ்க்கையையும் மாற்றியது. கிளாசிக் படமான ராஞ்சனாவை உருவாக்க உதவிய அத்தனை பேருக்கும் என் நன்றி.

10 ஆண்டுகளுக்கு பின் ராஞ்சனா உலகத்தில் இருந்து மற்றொரு கதை தேரே இஸ்க் மெய்ன். இது எந்த மாதிரியான பயணமாக இருக்க போகிறது என்று தெரியவில்லை. காத்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். இது சாகசமாக இருக்க போகிறது" என்று தெரிவித்து உள்ளார்.

ராஞ்சனா, அந்தராங்கி ரே படங்களை தொடர்ந்து தனுஷ் கூட்டணியில் ஒன்றிணைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தெரிவித்து உள்ளார். தமிழில் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இதில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : உள்ளூர் அரசுகளுக்கு கீழ் படியாவிட்டால் ட்விட்டரை மூடும் அவலம் - எலான் மஸ்க் ஆதங்கம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.