சென்னை: தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 171வது பிறந்தநாளை ஓட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சாமிநாத ஐயர் திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டு இருந்த திருவுருப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “தமிழ்த் தாத்தா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய உ.வே.சாவின் 171வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிதித்துறை அமைச்சர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செய்திருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் என அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் முதலாக கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் விதமாக மாநில கல்லூரியில் உள்ள பட்டிமன்றம் பேச்சுப் போட்டியில் என பல நடக்க இருக்கிறது என தெரிவித்தார். இனி ஆண்டுதோறும் உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் என தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டம்; பெண்களின் பாதுகாப்புக்காக விரைவில் அறிமுகம்! - PINK AUTO SCHEME
பாரதியார் காலம் கடந்து பேசக்கூடியவர். ராஜ்பவனில் பல சிலைகள் இருந்தாலும், பாரதியார் சிலை இல்லை. கடந்த 2 நூற்றாண்டுகளாக தமிழ் மொழியில் சிறந்தவர்கள் யாராக இருந்தாலும், பாரதியாருக்கு நிகரான ஒருவர் இல்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாரதியாரின் பெயரில் பல்கலைக்கழகங்கள் இருந்தும், ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை என ஆளுநர் கூறியிருந்தார்.
ஆளுநர் இவ்வாறு கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “ஆளுநர் அரசுக்கு ஆலோசனையோ அல்லது சுட்டி காட்டுவது போல் இருந்தால் அதிகாரிகளின் மூலமாகவோ, அல்லது குறிப்பு மூலமாக வழங்க வேண்டும். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறுவது போல் உள்ளது. இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல” என தெரிவித்தார்.