ETV Bharat / entertainment

'டாடா' பட இயக்குநரின் அடுத்த படம்... பூஜையுடன் துவக்கம்! - MG STUDIOS

எம்ஜி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், டாடா இயக்குநர் கணேஷ் K பாபு திரைக்கதையில் உருவாகும் "ரேவன்" (Raven) திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

Raven
ரேவன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 2:18 PM IST

சென்னை: எம் ஜி ஸ்டுடியோஸ் (MG STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண், கே.ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் "ரேவன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் மத்தியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் டாடா. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மிகப் பெரிய வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த இயக்குனர் அடுத்ததாக லைகா தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இவருக்கு இப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்தது. இந்த நிலையில் தற்போது "ரேவன்" என்ற படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். அதற்கான பூஜை விழா சென்னையில் நடைபெற்றது.

Raven shooting start
டாடா இயக்குநரின் ரேவன் படம் பூஜையுடன் துவக்கம்

இப்படத்தின்‌ பூஜையில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, S.S.லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ராக்ஃபோர்ட் என்ட்டெயின்மென்ட் முருகானந்தம், அருண் விஷ்வா, விநியோகஸ்தர் கோவை அரவிந்த் மற்றும் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, யாத்திசை இயக்குநர் தரணி ராஜேந்திரன், குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

மாறுபட்ட களத்தில் புதுமுகங்களின் தற்கால நவீன தலைமுறையின் கதை சொல்லும் திரைப்படமாக "ரேவன்" திரைப்படம் உருவாகிறது. மேலும் டாடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் கணேஷ் கே.பாபு கதை திரைக்கதை எழுத, அவரது இணை இயக்குநராக பணியாற்றிய, கல்யாண் கே.ஜெகன் இயக்குநராக அறிமுகாகிறார்.

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜ், VTV கணேஷ், வீரா, இந்துமதி, பா.அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஒரே கட்டமாக படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. முக்கியமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழுப்படப்பிடிப்பும் நடக்கவுள்ளது. "ரேவன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Jailer Box Office: சரிந்த 'ஜெயிலர்' பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. காரணம் இது தானா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.