ETV Bharat / entertainment

பீஸ்ட் சிறப்பு நிகழ்ச்சி : தொகுப்பாளராகிறார் இயக்குநர் நெல்சன்

author img

By

Published : Apr 1, 2022, 10:53 PM IST

பீஸ்ட் திரைப்படம் வருகிற மார்ச் 13 அன்று வெளியாகவிருக்கும் நிலையில் அந்தப்படத்தை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருப்பதாகவும்; அதை இயக்குநர் நெல்சன் தொகுத்து வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீஸ்ட் சிறப்பு நிகழ்ச்சி : தொகுப்பாளராகிறார் நெல்சன்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இதில் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையில் ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வேற லெவல் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில், 'பீஸ்ட்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஆடியோ வெளியீடு இல்லை என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஆடியோ வெளியீட்டுக்குப் பதிலாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தனியார் டிவியில் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சியை இயக்குநர் நெல்சனே தொகுத்து வழங்கியுள்ளாராம். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏனென்றால், நெல்சன் பயங்கர குசும்புக்காரர். விஜயும் அப்படிப்பட்டவர்தான் என்பதை அவரது முந்தைய டிவி நிகழ்ச்சிகளில் பார்த்துள்ளோம். இந்நிலையில் இருவரும் இணைந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.

இதையும் படிங்க:தாயை தோள்பட்டையில் சுமந்தே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மகள்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.