ETV Bharat / entertainment

வெற்றிமாறன் கதையில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சூரி! - சசிகுமார்

விடுதலை படத்திற்கு பிறகு வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்தில் சூரி கதாநாயாகனாக நடிக்கவுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 1:13 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடிததார். அப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சூரியின் நடிப்பும் பெரிதளவில் பாராட்டப்பட்டது. மேலும் அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை 2, வாடிவாசல் ஆகியவற்றின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் 'விடுதலை - பாகம் 2' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்யப்பட்டு விரைவில் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.

வெற்றிமாறன் கதையில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சூரி!!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க உள்ளார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் மேற்கொண்டுள்ளார். மல்டி ஸ்டாரராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

துரை செந்தில்குமார், வெற்றிமாறன், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. துரை செந்தில்குமார் எதிர் நீச்சல், கொடி உள்ளிட்ட படங்கள் மூலம் வெற்றி இயக்குநராக அறியப்படுபவர். இவர் இயக்கத்தில் சூரி கதை நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குளறுபடி.. ஏ.ஆர்.ரகுமானுக்கு துணை நிற்கும் பிரபலங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.