ETV Bharat / entertainment

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்.. அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடக்கம்! - மெர்குரி குழுமம் மற்றும் கனெக்ட் மீடியா

Ilayaraja biopic: மெர்குரி குழுமம் மற்றும் கனெக்ட் மீடியா இணைந்து தயாரிக்கும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், 2025ஆம் ஆண்டு அப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 5:17 PM IST

சென்னை: இந்தியத் திரையுலகில் இசை மேஸ்ட்ரோ என்றும், இசைஞானி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும், இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தை மெர்குரி குரூப் இந்தியா தயாரிக்க உள்ளது. தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்ட கனெக்ட் மீடியா என்கிற நிறுவனத்துடன் இணைந்து, மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாகச் செயல்பட உள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தயாரிப்புக் கூட்டணி தென்னிந்தியத் திரைத்துறையில் பொழுதுபோக்கை உலகளாவிய தரத்துடன், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், ரசிகர்களுக்குச் சிறந்த கதைகளைக் கொண்டு வர முயற்சிக்கும். அடுத்த பத்தாண்டுகளில் உலகளாவிய தொழில்நுட்பத்திற்கு இணையான வளர்ச்சியைத் தென்னிந்தியத் திரைத்துறையில் கொண்டு வருவதில் இந்த கூட்டணி ஒரு ஊக்கியாகச் செயல்படும். இந்த நிறுவனங்களின் கூட்டணிக்கு இளம்பரிதி கஜேந்திரன் என்பவர் தலைவராகச் செயல்படுவார்.

இதையும் படிங்க: ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியானது.. ரசிகர்களுடன் படம் பார்க்கும் ராகவா லாரன்ஸ்!

இதுகுறித்து மெர்குரி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் பக்தி சரண் கூறியதாவது, "திரைப்படங்களை வாழ்வின் ஒரு அங்கமாகக் கொண்டாடும் ரசிகர்கள், மிகப்பெரும் ரசிக கூட்டத்தைக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடும் படைப்புகள், வணிகத்தில் சாதனை படைக்கும் தயாரிப்புகளை வழங்கும் தென்னிந்தியத் திரைத் துறையில், நாங்களும் ஒரு அங்கமாகக் கால்பதிப்பது மகிழ்ச்சி.

மெர்குரி போன்ற உலகளாவிய தொடர்புகள் கொண்ட நிறுவனம், உலகமெங்கும் பயன்பாட்டில் இருக்கும் புதிய தொழில் நுட்பங்களை, தென்னிந்தியத் திரைக்குக் கொண்டு வரும். மேலும் கனெக்ட் மீடியாவுடன் பங்குதாரராக மட்டுமல்ல, பொழுதுபோக்கு துறையில் தெளிவான மற்றும் வலுவான புரிதல் உள்ளது.

மேலும், தொழில்துறையில் உள்ள பல்வேறு பங்குதாரர்களுடன், சிறந்த உறவும் எங்கள் கூட்டணிக்கு உள்ளது. எங்களின் இந்த புதிய தென்னிந்தியப் பிரிவு, புதுமையான படைப்புகளை ரசிகர்கள் விரும்பும் வகையில் பிரமாண்டமாக வழங்குவதை முதல் நோக்கமாகக் கொண்டு செயல்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "இது எங்க நிலம்... எங்க இடம்... விட்டுப்போக மாட்டோம்..." - அழுத்தமான வசனங்களுடன் கருப்பர் நகரம் டீஸர்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.