சென்னை: காமெடி நடிகரான கூல் சுரேஷ் சாக்லேட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு காதல் அழிவதில்லை, காக்க காக்க, மச்சி என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சிம்பு ரசிகரான கூல் சுரேஷ், மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்கு வித்தியாசமான முறையில் ப்ரமோஷன் செய்து சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அது மட்டுமல்லாது மற்ற நடிகர்கள் படத்தின் முதல் காட்சியின்போது அந்த படத்தின் ஹீரோ கதாபாத்திரம் போன்ற காஸ்ட்யூமில் தியேட்டருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
-
#CoolSuresh apologizes for yesterday's #Sarakku Press meet incident.. pic.twitter.com/RLIbmVAtaj
— Ramesh Bala (@rameshlaus) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#CoolSuresh apologizes for yesterday's #Sarakku Press meet incident.. pic.twitter.com/RLIbmVAtaj
— Ramesh Bala (@rameshlaus) September 20, 2023#CoolSuresh apologizes for yesterday's #Sarakku Press meet incident.. pic.twitter.com/RLIbmVAtaj
— Ramesh Bala (@rameshlaus) September 20, 2023
பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக கூல் சுரேஷை படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர். ஆனால், சில நேரங்களில் கூல் சுரேஷ் செய்யும் செயல்கள் அந்த படத்திற்கே பாதகமாக மாறுகிறது. இந்நிலையில் நேற்று மன்சூர் அலிகான் நடித்த ‘சரக்கு’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பேசிய கூல் சுரேஷ், “அனைவரையும் பாராட்டி மாலை போடுகிறோம், ஆனால் இந்த விழாவை நன்றாக தொகுத்து வழங்கும் தொகுப்பாளரை யாரும் பாராட்டவில்லை” என கூறிக்கொண்டு சட்டென்று யாரும் எதிர்பாராத நிலையில், தனது கையில் இருந்த மாலையை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண்ணுக்கு அணிவித்தார்.
-
No means No.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Highly condemnable. pic.twitter.com/47Ib4DLo5g
">No means No.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 20, 2023
Highly condemnable. pic.twitter.com/47Ib4DLo5gNo means No.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 20, 2023
Highly condemnable. pic.twitter.com/47Ib4DLo5g
இந்த செயல் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பேசிய கூல் சுரேஷ் “நானும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண்ணும் ஆரம்பம் முதல் நட்பாக பேசி வருகிறோம்” என கூறினார். பின்னர் கூல் சுரேஷ் விழா மேடையில் மன்னிப்புக் கேட்டுகொண்டார். ஆனால் கூல் சுரேஷின் இந்த செயல் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மேடையில் பேச வந்த நடிகர் மன்சூர் அலிகான், கூல் சுரேஷின் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டார். கூல் சுரேஷின் இந்த செயலுக்கு சமூக வலைதலங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூல் சுரேஷ் செய்தது மிகவும் தவறு, அவரை திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் கூல் சுரேஷ் சரக்கு பட ஆடியோ விழாவில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இயக்குநர் பாலா பெயரில் போலி சமூகவலைதள கணக்கு... என்னென்ன அட்டூழியங்கள் நடந்துருக்கு பாருங்க!