மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக 7 மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள 151, 178, 38 ஆகிய வாக்குச்சாவடிகளில் இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்காத நிலை இருக்கிறது. பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து வாக்களிக்க வந்த பொதுமக்கள் கூறியதாவது, காலை 6.30 மணியிலிருந்து வரிசையில் நிற்பதாகவும், மத்திய அமைச்சர்கள் வந்து பேசியும் இன்னும் வாக்கப்பதிவு ஆரம்பிக்கப்படவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தனர்.