லாலு பிரதாத் யாதவ் முதலமைச்சராக இருந்த 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தியோகார்க் கருவூலத்தில் இருந்து 84 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டதாக கால்நடை தீவன வழக்கு தொடரப்பட்டது . எனவே அவர் மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், இந்த வழக்குத் தொடர்பாக லாலுவை விசாரிக்கத் தேவை இல்லை எனக் கூறி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அதன் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யபோவதாக அறிவித்தது. இந்த சமயத்தில் லாலு பிரசாத் யாதவ் சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யகூடாது என்பதற்காக மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லியை அணுகியதாக பீகார் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி பாட்னாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த சம்பவம் பீகார் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து சுசில் குமார் மோடி கூறுகையில், "மாட்டு தீவன ஊழல் சம்பந்தபட்ட வழக்குகளில் சிபிஐ மேல்முறையிடு செய்யக்கூடாது என்பதற்காக லாலு அருண் ஜெட்லியை அணுகினார். ஆனால், சிபிஐ செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது எனக் கூறி ஜெட்லி அதனை மறுத்தார்" என்றார்