மக்களவைத்தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும், அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஹைதராபாத்திலுள்ள ஜஹிரா நகரில் இரு வெவ்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கான பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் காவல்துறையினர் கைப்பற்றினர்.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் ஹைதராபாத் காவல் துறையினர் மற்றும அம்மாநில தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 9 கோடி 45 லட்சம் பணம், 9 லட்சம் மதிப்பிலான தங்கம், 135 லிட்டர்கள் மதுபாட்டில்கள் மற்றும் 40 கிலோ கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹைதராபாத் கமிஷனர் அன்ஜனி குமார் தெரிவித்துள்ளார்.