அமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார். அதில் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
Election Updates: வீட்டில் ஒருவருக்கு வேலை - டிடிவி தினகரன் - தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2021
21:28 March 12
வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் - டிடிவி தினகரன்
21:19 March 12
கொ.ம.தே.கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- திருச்செங்கோடு - ஈஸ்வரன்
- பெருந்துறை - பாலுசாமி
- சூலூர் - செல்வம்
21:04 March 12
சிபிஐஎம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதியில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20:59 March 12
ரஜினிகாந்த் கட்சியின் ஆட்டோ ரிக்சா சின்னம், மீண்டும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு
நடிகர் ரஜினிகாந்திற்காக பதிவு செய்யப்பட்ட மக்கள் சேவை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட "ஆட்டோ ரிக்சா" சின்னத்தை அக்கட்சியினர் மீண்டும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.
20:41 March 12
அமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிடுகிறார்
அமமுகவின் பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஒவைசி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
19:29 March 12
அமமுகவின் மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
18:40 March 12
பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர்
அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, சேலம் - வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி வேட்பாளர் சித்ராவுக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி திறந்த வேன் மூலம் வாக்கு சேகரித்தார்.
18:08 March 12
தேமுதிக தனித்துப் போட்டி
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டிற்கான உடன்பாடு எட்டாததால், அக்கூட்டணியில் இருந்து விலகியது. இச்சூழலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி, அதுவும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து வரும் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக தற்போது அறிவித்துள்ளது.
17:48 March 12
மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி,
- மதுராந்தகம் - (தனி) - மல்லை சத்யா (மதிமுக துணை பொதுச் செயலாளர்)
- வாசுதேவநல்லூர் (தனி) - சதன் (திருமலைக்குமார் உயர்நிலை குழு உறுப்பினர்)
- அரியலூர் - வழக்கறிஞர் சின்னப்பா (அரியலூர் மாவட்ட செயலாளர்)
- சாத்தூர் - மருத்துவர் ரகுராம் (விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்)
- மதுரை தெற்கு - பூதூர் பூமிநாதன் (மதுரை மாநகர மாவட்ட செயலாளர்)
- பல்லடம் - முத்து ரத்தினம் (மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளர்)
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
17:33 March 12
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
- திரு.வி.க. நகர் (தனி) (15) – பி.எல். கல்யாணி
- ஈரோடு (கிழக்கு) (98) - எம். யுவராஜா
- லால்குடி (143) - டி.ஆர். தர்மராஜ்
- பட்டுக்கோட்டை (176) - என்.ஆர். ரங்கராஜன்
- தூத்துக்குடி (214) - எஸ்.டி.ஆர். விஜயசீலன்
- கிள்ளியூர் (234) - கே.வி. ஜூட் தேவ்

16:20 March 12
130 தொகுதிகளில் நேரடியாக மோதும் திமுக - அதிமுக
சட்டப்பேரவைத் தேர்தலில் 130 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. 18 தொகுதிகளில் பாமக உடனும், 14 தொகுதிகளில் பாஜக உடனும், 4 தொகுதிகளில் தமாகா உடனும் திமுக நேரடியாக மோதுகிறது.
15:15 March 12
மக்கள் நீதி மய்யம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
மநீம 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காண இணைப்பை சொடுக்கவும்
13:44 March 12
கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டி!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், சிங்காநல்லூர் தொகுதியில் களம் காண்கிறார்.
13:37 March 12
மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “அரசியலில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று களமிறங்கியவன் நான். இங்கு பெரிய மாற்றங்களை நிகழ்த்திய தலைவர்கள் இப்படி வந்தவர்கள் தான்” என்று கூறினார்.
11:49 March 12
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
09:23 March 12
வேட்புமனு தாக்கல் தொடக்கம்!
தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 12) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 19ஆம் தேதி கடைசி நாளாகும்.
09:18 March 12
திமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை, அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
08:18 March 12
Election Updates: 14ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மார்ச்14ஆம் தேதி முதல் தேர்தல் பரப்புரைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.