ETV Bharat / elections

தீபன் சக்ரவர்த்தி ஆகிய நான்...! இது டிஜிட்டல் வேட்பாளரின் கதை - digital campaign by deepan

மக்களுக்காக டிஜிட்டல் தளத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி, நல்ல கருத்துகளையும், தகவல்களையும் கொடுத்துவருபவர் தீபன் சக்ரவர்த்தி. தற்போது நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இவர், தான் அறிந்த டிஜிட்டல் தளங்களின் வாயிலாக மட்டுமே தனது பரப்புரையை மேற்கொண்டு இளைய சமுதாயத்தைக் ஈர்த்துவருகிறார்.

namakkal assembly constitueny indepedent candidate deepan chakravarthy, chennai vlogger deepan, சென்னை வ்ளாகர் தீபன், தீபன் சக்ரவர்த்தி, deepan chakravarthy digital campaign story, namakkal assembly constitueny candidate, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, டிஜிட்டல் பரப்புரை, digital campaign by deepan, நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தீபன் சக்ரவர்த்தி
chennai vlogger deepan
author img

By

Published : Mar 29, 2021, 9:47 PM IST

Updated : Mar 30, 2021, 2:41 PM IST

நாமக்கல்: ‘சென்னை விலாகர்’ என்னும் வலையொளியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான தீபன் சக்ரவர்த்தி, நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ‘லாரி’ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

செய்தியாளராக எட்டு ஆண்டுகள் பயணித்தவர், ஐயப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த தீபன் சக்ரவர்த்தி. அப்பயணத்தின் மூலம் சமூகத்தின் மீது அவருக்கு அலாதி ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்தத் தமிழ் சமூகத்திற்கு தான் அறிந்த தகவல்கள், தான் தேடிச் செல்லும் தகவல்கள் என அனைத்தையும் பகிர நினைத்த அவர், ‘சென்னை விலாகர்’ என்னும் வலையொளி பக்கத்தை நிறுவினார். அதுமட்டுமில்லாமல் அனைத்து சமூக ஊடகங்களிலும் தன்னை ‘சென்னை விலாகர் தீபன்’ ஆக நிலைநிறுத்தியும் கொண்டார்.

namakkal assembly constitueny indepedent candidate deepan chakravarthy, chennai vlogger deepan, சென்னை வ்ளாகர் தீபன், தீபன் சக்ரவர்த்தி, deepan chakravarthy digital campaign story, namakkal assembly constitueny candidate, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, டிஜிட்டல் பரப்புரை, digital campaign by deepan, நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தீபன் சக்ரவர்த்தி
சென்னை விலாகர் தீபன்

தற்போது தேர்தல் களம் தகித்துக்கொண்டிருக்க, அங்கேயும் களமாடப் புறப்பட்டுவிட்டார் தீபன். ஆம், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முதல் முறையாக அரசியல் களம் காண்கிறார். இதுவே இவரின் முதல்முறை அரசியல் பயணம் என்றாலும், பெரும் செலவுகள் இன்றி, டிஜிட்டல் தளங்கள் மூலம் மட்டுமே பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வருகிறார். இது தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர்களுக்குப் பெரும் உந்துதலாக இருக்கும் என்று பூரிப்படைகிறார் தீபன்.

நாமக்கல் சுயேச்சை வேட்பாளர் தீபன் சக்ரவர்த்தி

"எம்.எல்.ஏ.., எனும் நான்" என்ற வலைத்தொடர் ஒன்றை உருவாக்கி அதில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எவ்வாறு வேட்புமனு தாக்கல்செய்வது, சின்னம் தேர்ந்தெடுப்பது, தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பது, சட்டப்பேரவை உறுப்பினரின் கடமைகள், அவரின் பணிகள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் செய்முறைக் காணொலிகளைப் பதிவிட்டுவருகிறார். இது சமூக வலைதளவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீபன் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது

மாற்றங்களைத் தேடிச் செல்வதைவிட, அதை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தீபன், தனது மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ள லாரியே தனக்குச் சின்னமாகக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாகத் தெரிவிக்கிறார். தன்னைப் பின்தொடரும் சமூக வலைதளவாசிகளுக்கு நல்ல தகவல்களைக் கொண்டுச்சேர்க்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையோடு களத்தில் நிற்கும் தீபன் சக்ரவத்தியின் தேர்தல் களமாடலையும் மக்கள் வித்தியாசமானதாக தான் கவனித்து வருகின்றனர்.

தீபன் சக்ரவர்த்தி ஆகிய நான்... டிஜிட்டல் யுகத்தின் டிஜிட்டல் வேட்பாளர்

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற சொல்லாடலை மெய்ப்பிக்கும்விதமாக மக்கள் பணி செய்ய களத்தில் இறங்கியிருக்கும் டிஜிட்டல் யுகத்தின் டிஜிட்டல் வேட்பாளர் தீபன், தன்னைப் பின்தொடருபவர்களின் வாக்குகளையும், இணையத்தைச் சார்ந்திருக்கும் மக்களின் வாக்குகளையும் தன்வசப்படுத்துவாரா என்பது தேர்தல் முடிவுகளே நமக்குத் தெரிவிக்கும். இளைஞர்களை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்கும் சில அச்ச நெறிகளை தீபன் உடைத்திருக்கிறார் என்பதே அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாகப் பார்க்கலாம்.

முக்கிய இணைப்புகள்

நாமக்கல் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்

டூப் ஸ்டாலின் காலில் விழுந்து குறைகளை கூறிய மூதாட்டி!

'எங்க இருக்க... என் தங்கமே!' - நாமக்கல் இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!

Last Updated : Mar 30, 2021, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.