விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செட்டியார்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியனை ஆதரித்து கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ’’தொகுதி மாறி வந்திருக்கும் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சிவகாசி பகுதியில் ஒன்றும் செய்யாமல் இங்கு வந்து நின்று முயற்சி பண்ணி பார்க்கிறார். இங்கும் அவரால் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு முடியும். ஆகையால் அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க கூடாது. அவர் நல்லா பேசுவார். எப்படி பேசக் கூடாதோ, அந்த அளவுக்கு இறங்கிப் பேசுகிறார்.
ராஜபாளையம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகப் போட்டியிடக்கூடிய தங்கபாண்டியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அவர் வெற்றிபெற்றவுடன் ராஜபாளையம் பகுதிக்குத் தேவையான அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்.
மாம்பழ குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு அந்தத் தொழிற்பேட்டையில் 75 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ’ரெய்டுகளால் திமுகவிற்கு வாக்குகள் அதிகரிக்கும்’ - கனிமொழி