ETV Bharat / crime

உயர்நீதிமன்றம் முன்பே ஆக்கிரமிப்பா?-அதிரடி உத்தரவு - Will not allow pavements encroachment near both sides on NSC Bose road, MHC

சென்னை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னையில் என்.எஸ்.சி. போஸ் சாலைகல் ஆக்கிரமிப்புகள்

author img

By

Published : Apr 5, 2022, 4:53 PM IST

Updated : Apr 5, 2022, 5:26 PM IST

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையின் ஆக்கிரமிப்புகள் அகற்றியபின் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, டிராஃபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர்ந்திருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறி புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சாலையில் ஆக்கிரமித்து நடத்தப்படும் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டாலும், மீண்டும் காளான்களைப் போல முளைத்து விடுவதாகத் தெரிவித்தார்.

நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எனவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோரினார்.

வியாபாரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, 15 மாற்று இடங்களை அடையாளம் கண்டு தெரிவித்தும், அதன் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவில், என்.எஸ்.சி. போஸ் சாலை வியாபாரப் பகுதி அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றியபின் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டு, நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசு ஆறு வார கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Last Updated : Apr 5, 2022, 5:26 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.