ஈரோடு: அந்தியூர் அடுத்துள்ள ஒரிசேரிப் பகுதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவர், சுரேஷ் (23). இவர் ஆடு, மாடு வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
இதனால், இவர் 10ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளாட்டு கிடா ஒன்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி மாலை மேய்ச்சலுக்காக கிடாவை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டு பின்னர், தனது வீட்டின் அருகே கட்டி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
கிடா திருட்டு:
இதையடுத்து, வீடு திரும்பிய சுரேஷ் வீட்டின அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த கிடா மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பதறிப்போன தினேஷ் அருகிலுள்ள வீடுகளில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடா கிடைக்கவில்லை.
இந்நிலையில், மறு நாள் (ஜூலை 12) தன்னுடைய சொந்த வேலைக்காக ஆப்பக்கூடல் அடுத்த தளவாய்பேட்டை பகுதிக்கு தனது தந்தையுடன் தினேஷ் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சாலையோரமாக இரண்டு நபர்கள் ஆட்டை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.
கிடா திருடியவர்கள் கைது:
இதனைக் கண்டு சந்தேகமடைந்த தினேஷ், அவரது தந்தையுடன் அந்த இருசக்கர வாகனத்தின் அருகே சென்றார். பின்னர், அங்கிருந்த கிடா தங்களது என உறுதி செய்தனர். அப்போது, அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயற்சித்தபோது விரட்டிப் பிடித்த தினேஷ் அவர்களை ஆப்பக்கூடல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
பின்னர், அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டியிடம் கள்ள நோட்டு கொடுத்து ஆடு வாங்கிச் சென்றவர்கள்: தீவிரமாகத் தேடிவரும் காவல் துறை