ETV Bharat / crime

இளைஞரை கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கு: பெண் உட்பட இருவர் கைது! - திருப்பத்தூர் அண்மை செய்திகள்

வாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்து தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் வீசிய வழக்கில், பெண் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாலிபர் அடித்து கொலை
வாலிபர் அடித்து கொலை
author img

By

Published : Jan 18, 2021, 10:10 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை - நிம்மியப்பட்டு இடையில் உள்ள விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் தலையில் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று நேற்று (ஜன.17) கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர், பெத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (32) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பளர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து நாகராஜனின் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில், நாகராஜூக்கும், பெத்தூர் பகுதியைச் சேர்ந்த கோகிலா (35) என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆலங்காயம் காவல்துறையினர் கோகிலாவிடம் நடத்திய விசாரணையில், தனக்கும் நாகராஜூக்கும் தொடர்பு இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷன் என்பவருடன் சேர்ந்து நாகராஜ் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து கிணற்றில் வீசியதாக கோகிலா அளித்த வாக்கு மூலத்தின் பேரில், ஆலங்காயம் காவல்துறையினர் கோகிலா, வெங்கடேஷன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காணாமல் போன இளைஞர் தனியார் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.