ETV Bharat / crime

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: 5 பேருக்கு சம்மன் - பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர்

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தில் 5 பேருக்கு சம்மன்

author img

By

Published : May 25, 2021, 2:55 PM IST

Updated : May 25, 2021, 4:45 PM IST

14:50 May 25

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி முதல்வர் உள்பட 5 பேரை வரும் ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி குழந்தைகள் பாதுகாப்புக்கான மாநில ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தில் 5 பேருக்கு சம்மன்
ராஜகோபாலன் குறித்து இன்ஸ்டாகிராமில் மாணவிகளுக்கு இடையேயான உரையாடல்

சென்னை: கே.கே நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ராஜகோபாலன் என்ற வணிகவியல் ஆசிரியர், குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் புகார் எழுந்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிப் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

தீவிரம் காட்டும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையின் முடிவில் ராஜகோபாலன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட மாணவி அளித்தப் புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து இன்று (மே 25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில், குழந்தைகள் பாதுகாப்புக்கான மாநில ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு, குழந்தைகள் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஐந்து பேருக்கு சம்மன்

அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் 4ஆம் தேதி காலை 11 மணியளவில் குற்றம்சுமத்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளியின் முதல்வர், நிர்வாகி, புகாரை பொதுவெளியில் பதிவிட்ட அப்பள்ளியின் முன்னாள் மாணவி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகிய 5 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐவருக்கும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாநில ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கான அதிகாரம் என்ன?

மத்திய அரசின் "குழந்தைகள் பாதுகாப்பு ஆணையங்களுக்கான சட்டம், 2005", பிரிவு 17(1)-இன்படி தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு கடந்த 28-01-2013 முதல் செயல்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் பிரிவு 13(1)-இன்படி குழந்தைகள் பாதுகாப்பிற்காக அமலில் உள்ள சட்டங்களில் உள்ள வழிவகைகளை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் சட்டத்தை திறம்பட அமல்படுத்த தக்க பரிந்துரைகளை வழங்கவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

தலைமையாசிரியர் ஆஜர்

சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் பத்மசேஷாத்ரி பள்ளி தலைமையாசிரியர் கீதா கோவிந்தராஜன், பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Last Updated : May 25, 2021, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.