ETV Bharat / crime

மகளிர் பள்ளி அருகே பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் வெட்டிக்கொலை - பெரம்பலூரில் ஒருவர் கொலை

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, அடையாளம் தெரியாத நபர்களால், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை : காவல்துறையினர் விசாரணை

author img

By

Published : Aug 4, 2022, 10:36 PM IST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நிர்மலா நகர் பகுதியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (தோமினிக் பள்ளி) அருகே இன்று(ஆக.4) மாலை இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் தெருவைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் வினோத்(28) மற்றும் சுப்ரமணிய பாரதியார் தெருவைச்சேர்ந்த துரை என்பவரின் மகனான கார்த்திக்(23) ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் பலத்த காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்தக் கொலை சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகள் யார்..?, எதற்காக கொலை செய்தார்கள்...?, என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை தெரியவரவில்லை . பட்டப்பகலில் பெண்கள் படிக்கும் பள்ளி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த குறுகலான பகுதியில் நடந்த கொலை சம்பவம் பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.