ETV Bharat / crime

மருத்துவமனையில் நர்ஸுக்கு கத்திக்குத்து; கணவர் வெறிச்செயல் - சிவானந்தா காலனி

தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆகப் பணிபுரியும் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் நர்சுக்கு கத்திக்குத்து; கணவர் வெறிச்செயல்

author img

By

Published : Oct 3, 2022, 9:53 PM IST

Updated : Oct 3, 2022, 10:23 PM IST

கோவை: சிவானந்தா காலனி பகுதியைச்சேர்ந்தவர் நான்சி (32), இவரது கணவர் வினோத். நான்சி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் செவிலியாகப் பணிபுரிந்து வருகிறார்.

நான்சி வினோத் தம்பதிக்கு திருமணமாகி 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்ததாகவும், 2 ஆண்டுகளுக்கும் மேல் பிரிந்து வாழ்வதாகவும் தெரிகிறது. இன்று மதியம் 3 மணிக்கு அவரது கணவர் வினோத், குப்புசாமி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அதன் பிறகு அவரது மனைவி நான்சி பணிபுரியும் பிரிவிற்குச்சென்று தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியைக் கொண்டு மனைவியை 9 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நான்சி உயிரிழந்துள்ளார். மேலும் நான்சியின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் வினோத்தை பிடித்து அறையில் அடைத்தனர்.

நான்சியை கத்தியால் குத்தியதில் வினோத்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தடயவியல் துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச்சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்சியின் நன்னடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மருத்துவமனையில் நர்சுக்கு கத்திக்குத்து; கணவர் வெறிச்செயல்
மருத்துவமனையில் நர்ஸுக்கு கத்திக்குத்து; கணவர் வெறிச்செயல்

இதுகுறித்து மருத்துவமனையின் தரப்பில் இருப்பிட மருத்துவர் சுந்தர்ராஜன் கூறும்போது, ’மருத்துவ வளாகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. குடும்பச் சண்டை காரணமாக அவரது கணவர் நான்சியை கத்தியால் குத்தியுள்ளார், தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடித்துவிட்டு தொல்லை கொடுத்த கணவர்; விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி

Last Updated : Oct 3, 2022, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.