கர்நாடகா மாநில பெங்களூருவில் இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் விசாரணை மேற்க்கொண்ட காவல் துறையினர் போதைப் பொருள் விற்பனை செய்ததாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் ஒகாஃபோர் (38), அச்சுனேஜே நாஃபோர் (36) ஆகியோரை கைது செய்யதனர். இதில், அவர்களிடமிருந்து இருபது கிராம் மருந்துகள், ஆறு மொபைல் போன்கள், ஒரு ஹோண்டா கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைப் போன்று, உப்பரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மர்ஜுன்னாவில் கஞ்சா விற்ற மதன், ரஞ்சித் குமார், மகர்சாய நாயக், சந்தன், முகுந்த் ராஜ், மோனிஷ் ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒன்பது கிலோ கஞ்சா, ஒரு வெயிட்டிங் மிஷின், ஐந்து மொபைல்கள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க...இணையத்தில் பெண் தேடுபவரா நீங்கள் - கொஞ்சமல்ல... ரொம்ப உஷாரா இருங்க!