ETV Bharat / crime

கடவுள் சொன்னதால் பாட்டியை கல்லால் அடித்து கொன்ற மாணவர் - ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்

கடவுள் சொன்னதால் பாட்டியை கொலை செய்தேன், என்னை தடுத்தால் உங்களையும் கொலை செய்துவிடுவேன் என்று கூறி தனது சொந்த பாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

depressed college student kills his grandma
பாட்டியை கல்லால் அடித்து கொலை செய்த கல்லூரி மாணவர்
author img

By

Published : Mar 18, 2021, 12:54 PM IST

Updated : Mar 18, 2021, 1:48 PM IST

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் விளையாட்டால் மனச் சிதைவு ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவர் தனது பாட்டியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.

கல்லால் அடித்து கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தைச் சேர்ந்த மாரி (80). கல்லூரி மாணவனான அவரது பேரன் ஹரிஹரன் மாரியை கல்லால் அடித்து கொன்றதாக எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இறந்தகிடந்த மாரியின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேரன் ஹரிஹரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ஹரிஹரன் மனச்சிதைவு காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பூ.கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் ஹரிஹரன் (21), திண்டுக்கல் மாவட்டம் காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண்மை துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரி மூடப்பட்டதால், ஆன்லைன் மூலம் வகுப்புகளை பங்கேற்று படித்து வந்துள்ளார். வகுப்பு நேரம் போக மீதமுள்ள நேரங்களில் ஆன்லைன் விளையாட்டில் அதிக ஈடுபாடுடன் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டு இரவு பகல் முழுவதும் தன்னை விளையாட்டில் முழுமையாக அடிமையாகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தன்னை அறியாமலேயே தாய், தங்கை தந்தை ஆகியோரிடம் கோபமான நடத்தையை வெளிப்படுத்தியுள்ளார். மகனிடம் நிகழ்ந்துள்ள மாற்றத்தை கண்ட மண்ணாங்கட்டி, தன் மகனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரிஹரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது எனவும், உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மருத்துவ சிகிச்சை

இதைத்தொடர்ந்து ஹரிஹரனுக்கு மருத்துவர் சிகிச்சையை அளிக்க தொடங்கினார். சில நாள்களுக்குப் பிறகு அவர் ஓரளவு குணமடைய, இனிமேல் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறலாம் என்று மருத்துவர் கூறினார். பின்னர் உடனே ஹரிஹரன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

தனது வீட்டில் இருந்தால் மகன் சீக்கிரம் குணமடைய மாட்டான் என்றும் நினைத்த மண்ணாங்கட்டி, எல்லை கிராமத்தில் இருக்கும் ஹரிஹரனின் பார்ட்டி வீட்டுக்கு அவரை கொண்டு விட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிகரன் சில நாள்களாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

நான் தான் கடவுள் என சொல்லி கொலை செய்த ஹரிஹரன்

இதனால் ஹரிஹரன் அதிகளவு மனநிலை பாதிக்கப்பட்டு, "நான் தான் கடவுள்" என்று ஒரு கட்டத்தில் தெரிவித்தாக கூறப்படுகிறது. பாட்டியுடன் தூங்கிக்கொண்டிருந்த ஹரிஹரன், நேற்று நள்ளிரவில் (மார்ச் 17) திடீரென்று எழுந்து வயதான பாட்டி முதுகு பகுதியில் உட்கார்ந்து தியானம் செய்வதாக கூறி அருகில் இருந்த கல்லையெடுத்து பாட்டியின் தலைப்பகுதியில் பலமாக தாக்கியும் நெஞ்சுப் பகுதியிலும் தாக்கியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த பாடி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை தடுக்க முயற்சித்தனர். அப்போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஹரிஹரன், "நான் கடவுள். என் பாட்டியை கடவுள் கொல்ல சொன்னார். நீங்கள் கிட்ட வந்தால் உங்களையும் கொன்றுவிடுவேன்" என்று அக்கம்பக்கத்தினர் மிரட்டியுள்ளார்.

கல்லால் பலமாக தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த ஹரிஹரனின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆன்லைன் விளையாட்டால் கல்லூரி மாணவனின் மனநலம் பாதிக்கப்பட்டு, தனது பாட்டியை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தாயின் கன்னத்தில் பளாரென அறைந்த மகன்... சாலையிலே நடந்த கொடூரம்!

Last Updated : Mar 18, 2021, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.