பெங்களூரு: கோவை மாவட்டம் ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அந்தப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இதனையடுத்து நேற்று முந்தினம் (நவம்பர் 12) மாலை மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (நவம்பர் 13) முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மூலம் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து நேற்று பேட்டியளித்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன், இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்திற்காக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்சோ சட்டத்தில் குற்றவாளியாகச் சேர்க்கப்படுகிறார் எனவும், அவரைப் பிடிக்க இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சன் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கோவைக்கு அழைத்துவரப்படுகிறார்.
இதையும் படிங்க: 'பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்க' - மு.க.ஸ்டாலின்