கேரள : இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஏலப்பாறை அருகே ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பாக்கியம் என்ற பெண் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தார்.
மேலும், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு பவுலஸ் என்பவர் உயிரிழந்தார். அதேபோல கனமழையினால் மரங்கள் சாய்ந்து விழுந்து தோட்டத் தொழிலாளர்கள் லட்சுமி, முத்துலட்சுமி, சோமு சக்ரா ஆகியோர் உயிரிழந்தனர்.
கடந்த வாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு தோட்ட தொழிலாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. மரங்கள் விழுந்தும் மண் சரிவும் ஏற்பட்டதால் பல பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து